ஹலோ நண்பர்களே,
வணக்கம் . நண்பர் திரு கௌஷிக்ராஜா அவர்கள் 'பேஸ்புக்'கில்
ஒட்டியனுப்பிய செய்தி மூலம் , திருநெல்வேலி ஜங்ஷன் --செங்கோட்டை
பாசெஞ்சர் இரயில் மீண்டும் ,புதிய அகல ரயில் தடத்தில் ஓடத் தொடங்கி விட்டதாக
தெரிந்து கொண்டேன். இந்த ரயில் தடமானது மிகப் பழமையானது ஆகும். அப்போது,
மீட்டர் கேஜாக இருந்தது.
நான் சிறுவனாக இருந்த பொழுது, இந்த ரயிலில் பயணம் செய்த அனுபவமே தனிதான்.
அப்போது , நீராவி எஞ்சின்தான் . என்ஜினில் டிரைவர் தவிர ,கரி அள்ளியள்ளி பாயிலர்க்குள்
போடுவதற்கென்று ஒரு உதவியாளரும் இருப்பார். தலையில் ஒரு கைக்குட்டையை ஸ்டெயிலாகக்
கட்டியிருப்பார் . கையிலிருக்கும் ஒரு சம்மட்டியால் ,வெகு லாகவமாகக் கரியை அள்ளியெடுத்து
போடும் அழகே தனிதான்.
அப்போது ,திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரண்டே பிளாட்பாரம்தான் . ஒன்றிலிருந்து
திருச்செந்தூர் பாசஞ்சர் புறப்படும் . இன்னொன்று ,செங்கோட்டை ரயிலுக்கு.
இருப்புப்பாதையில் ,ரயில் பெட்டிகள் (ஏழு அல்லது எட்டுப் பெட்டிகள் ) நிற்கும் .எஞ்சின் , முன்
பகுதியிலிருந்து தடத்தில் ,மெல்ல மெல்ல பின் நோக்கி வரும் . பெட்டி அருகே வர வர எஞ்சின்
வேகம் மிகமிகக் குறையும். ஒரு ரயில்வே பணியாளர், முதல் பெட்டியின் இணைப்புப் பகுதி
அருகே நின்று கொண்டு, கையை அசைத்து அசைத்துச் சைகை செய்வார். மெல்லமெல்ல எஞ்சின்
வந்து , இலேசாக ஒரு இடியிடித்து பெட்டியுடன் இணையும். (இந்த அதிர்வால், பெட்டிகள் அனைத்தும்
மூன்று அல்லது நான்கு அடி பின்னோக்கி நகரும்.) அப்பணியாளர் , எஞ்சின் -பெட்டி இணைப்பை
நன்றாக , டைட் செய்து சரி செய்வார். பாசஞ்சர் செல்லத் தயார்..! (இதற்குப் பெயர், 'எஞ்சின் தொடுப்பது ')
பெட்டிக்குள் முண்டியடித்து ஏறி ,ஜன்னல் ஸீட்டை பிடிக்கக் கடும்போட்டி இருக்கும். ஒரு வழியாக ,
எப்படியோ, நான் பிடித்து விடுவேன். முகத்தில் பெரிய வெற்றிப் பெருமிதம்.
டிங் ...டிங்..டிங்..! ஒன்றுமில்லை , பிளாட்பாரத்தில் , தூணில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் ,ஒரு
சிறிய தண்டவாளத் துண்டில், ஒரு இரும்பு துண்டால் பணியாளர் அடிக்கும் ஓசைதான் அது. பெயர்
'முதல் மணி'...இப்படி ,மூன்று முறை அடிப்பார். மூன்றாவது மணியும் அடிக்கப்படும்.
ரயில்கார்ட் ,வெள்ளைச் சீருடையில் இருப்பார். மூன்றாவது மணி அடித்ததும், அவர், தனது வாயில்
விசிலை வைத்து , பெரிதாக ஊதுவார். விசில் சத்தம் காதலி அடைக்கும். கையில் உள்ள பச்சைக் கொடியை
அசைத்து அசைத்துக் காட்டுவார்.
டிரைவர் , பூம்பூம் என்று ஹாரன் ஓசை எழுப்புவார். ரெடி....சுக்...சுக்..சுக்..சுக் ...மெல்ல நகரும் ..
நல்ல கறுப்புப் புகை ,குப்குப் என்று வெளி வரும்...அப்படியே வரும் புகை, ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும்
எனது முகத்திலும், (குறிப்பாகக் கண்ணில் ) உடையிலும் நன்றாகப் படியும். கண்ணில் கரி விழுந்து ,எரிச்சல்
எடுக்கும். கண்ணிலிருந்து நீர் வரும்...ஆனாலும் ,ஜன்னல் ஸீட்டை விடமாட்டேன்.
பயணம் மெல்ல தொடரும்....அம்பாசமுத்திரம் வரும்...! எஞ்சினுக்கு நீர் பிடிக்கும் ஸ்டேஷன் அது. ஒரு
அரைமணி நிற்கும். தவலைவடை ,முறுக்கு,எல்லாம் அங்கு வாங்கித் தின்போம்.
எஞ்சினுக்குத் தண்ணி பிடித்து முடிந்ததும் , தண்டவாள மணி மூன்று தடவை, விசில், பச்சைக்கொடி....
மீண்டும் பயணம் தொடரும்...
இப்படி, ஒரு வழியாகச் செங்கோட்டை போய்ச் சேரும்போது மணி இரவு 9...9.30 ஆகியிருக்கும்.
கரிவிழுந்து ,விழுந்து சிவந்த கண்களோடும்.. கறுப்புப் புகை படிந்த உடையோடும் இறங்குவோம்...
எப்படியெனினும், அந்த ரயில் பயண சுகமே தனிதான்...!
ஓ , நீராவி எஞ்சினே.. எங்கே போய் விட்டாய் நீ...?

No comments:
Post a Comment